கேரள மாநிலம் சபரிமலையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ள வானிலை மையம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அங்கு 7 சென்டிமீட்டர் முதல் 11 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.