சென்னை ஆவடி அருகே போதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் பொதுமக்களை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர் பகுதியை சேர்ந்த பரமசிவம், பட்டாபிராம் மின்சார அலுவலகத்தில் லைன் மேன்-ஆக பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துக்கொண்டு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார்.
அப்போது போதையில் அங்குவந்த 4 இளைஞர்கள், கையில் பிளாஸ்டிக் பைப்புகளை வைத்துக்கொண்டு பயணிகளை மிரட்டும் வகையில் சுற்றித்திரிந்தனர். இதை தட்டிக்கேட்ட பரமசிவத்தை, இளைஞர்கள் பைப்பால் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
போதை இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இதை கண்ட சக பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.