புதுச்சேரியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுச்சேரி பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த அந்தோணி என்பவர், அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில்அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அந்தோணிக்கு 20 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.