வங்கதேசத்தில் இஸ்கானின் முக்கிய தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மாச்சாரி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டு தலங்கள், வீடுகள், சொத்துகள், உடமைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இந்து அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய இஸ்கான் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சின்மயி கிருஷ்ண தாஸ் பிரம்மசாரியை போலீசார் கைது செய்தனர். அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி, சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மாச்சாரி கைது செய்ததாக இஸ்கான் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.