விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த சமூக வலைத்தள பிரபலத்தை தாக்கும் விசிக கட்சியினரின் வீடியோ வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த அருண்குமார் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மேலும், சமூக வலைத்தளமான இன்ஸ்ட்ராகிராமில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து மக்களிடையே பிரபலமடைந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக கட்சியை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர், அருண்குமாரை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அருண்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.