கரூரில் மருந்தகத்தில் இருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காந்திகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் மருந்தகத்துக்கு வந்த 2 பேர், மருந்து வாங்குவதுபோல நடித்து கடையில் இருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தான்தோன்றிமலை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது ரஞ்சித் குமார், சக்திவேல் ஆகிய இருவர் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டது.