வக்பு சட்ட மசோதா சொல்வது என்ன?
Aug 6, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வக்பு சட்ட மசோதா சொல்வது என்ன?

Web Desk by Web Desk
Nov 26, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விரைவில் தமது அறிக்கையை வழங்கவுள்ளதால் வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனல்பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தப் போகும் அந்த மசோதாவில் அப்படி என்ன இருக்கிறது? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..!

இஸ்லாமிய மக்கள் இறையருள் வேண்டி மசூதிகள், தர்க்காக்கள் மற்றும் மதரஸாக்களுக்கு தானமாக வழங்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வக்பு சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக நிலங்களை கொண்டிருப்பவை வக்பு வாரியங்கள்தான். ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை உள்ளடக்கிய 8 லட்சத்து 70 ஆயிரம் சொத்துகள் வக்பு வாரியங்கள் வசமுள்ளன. இவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்.

இந்த சொத்துகளை கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி 1954-ஆம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் 1958-ஆம் ஆண்டு வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. பிறகு 1995-ஆம் ஆண்டு வக்பு சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் வக்பு வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அதன் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும் வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரவேண்டியது அவசியம் என்று கருதி அதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

அதன்படி, வக்பு வாரியத்துக்கு நிலத்தை கொடுப்பவர் குறைந்தது 5 ஆண்டுகளாவது இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும்.

வக்பு வாரியத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க புதிய மசோதா வழி செய்கிறது. வக்பு கவுன்சில் மற்றும் மாநில அளவிலான வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்படுகிறது.

அதே போல் வக்பு சட்டம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படுகிறது. அவர் இஸ்லாமியராக இல்லாவிட்டாலும் வக்பு வாரிய சொத்து பிரச்னைகளில் இறுதி முடிவு எடுக்க முடியும்.

புதிய மசோதாவின்படி வக்பு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரம் கூடுதல் ஆணையரிடம் இருந்து பெறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரிடம் வழங்கப்படுகிறது.

வக்பு நிலங்களை டிஜிட்டல் முறையில் பட்டியலிடவும், வக்பு நிலமாக அறிவிக்கப்படும் முன்பு சம்மந்தப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்கவும் மசோதா வழி செய்கிறது.

இதுபோன்ற பல்வேறு திருத்தங்களைக் கொண்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்ப்பு எழுந்தது. வக்பு வாரிய சொத்துகளை முஸ்லிம்களிடம் இருந்து பறிக்கும் முயற்சி இது என இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டியதை அடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்காக வக்பு மசோதா அனுப்பப்பட்டது.

தமது அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விரைவில் வழங்க இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடரிலேயே வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது. வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: bjpWhat does the Waqf Bill say?Waqf Bill
ShareTweetSendShare
Previous Post

ராணுவ வீரரை தரதரவென்று இழுத்து சென்ற போலீசார்!

Next Post

சாம்ராஜ்யம் சரிந்த கதை! : மகாராஷ்ட்ராவின் சாணக்யர் வீழ்ந்தது எப்படி?

Related News

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது – நகை பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கிய செய்தி நாளிதழ் நகல் வெளியீடு!

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies