அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா செய்த ராணுவ வீரரை, போலீசார் தரதரவென்று இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலத்தகராறு தொடர்பாக, ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித் குமாரின், தந்தை, தம்பி மற்றும் தங்கை ஆகியோரை, ஜெயங்கொண்டம் காவல்துறையில் பணியாற்றி வரும் சரண்ராஜ் மற்றும் அவரது தம்பி சத்தியமூர்த்தி ஆகியோர் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தனது குடும்பத்தினருக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ராணுவ வீரர் ரஞ்சித் குமார் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, ராணுவ வீரருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.