சென்னை மாநகர பேருந்தில் அருவி போல் மழைநீர் கொட்டியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னையில் காலை முதல், தி.நகர், அண்ணா நகர் மற்றும் கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் அரசு பேருந்துகளில் வழக்கம் போல் பயணம் செய்தனர்.
இந்நிலையில், பாரிமுனையில் இருந்து மாநகர பேருந்தான தடம் எண் 4 ராயபுரம் சென்றது. அப்போது அதிக அளவில் மழை பெய்ததால் பேருந்துக்கு உள்ளே மேற்கூரையில் இருந்து அருவி போல் மழை நீர் கொட்டியுள்ளது. இதனால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.