விழுப்புரம் மாவட்டம் டி.மேட்டுப்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகனமழை பெய்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த டி.மேட்டுப்பாளையம் பகுதி மக்கள், அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய பொதுமக்கள், 5 நாட்களாக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். மேலும், அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் எவ்வாறு பயனளிக்கும் என கேள்வி எழுப்பிய கிராமமக்கள், அந்த உதவித் தொகை தங்களுக்கு தேவையில்லை எனவும் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.