திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு மாவட்டங்ளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், 67 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில், கார்த்திகை மகா தீபம் வரும் டிசம்பர் 13ம் தேதி ஏற்றப்படுகிறது.