மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியாத அவலம், இதுதான் திராவிட மாடலா? - எல்.முருகன் கேள்வி!
Oct 23, 2025, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியாத அவலம், இதுதான் திராவிட மாடலா? – எல்.முருகன் கேள்வி!

Web Desk by Web Desk
Dec 5, 2024, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியவில்லை என்றும் இதுதான் திராவிட மாடலா என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ” பல்லாவரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் குடித்ததில் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 30 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீருடன் கழிவுநீர் கலந்ததும், அதனை தெரியாமல் குடித்த மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிற்கே முன்மாதிரி எனக் கூறிக்கொள்ளும் இந்த போலி திராவிட மாடல் அரசு, மிக மிக அடிப்படையான பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கூட விநியோகம் செய்ய முடியாத அவல நிலையில் இருப்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஒரு புறம் புயல் பாதிப்பால் வட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வாய்ஜாலம் பேசும் திமுக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் புயல்- மழையால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் தவிர்த்து இருக்கலாம்.

கையாலாகாத திமுக அரசு மீது மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். பெருமளவில் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

தங்கள் பகுதிகளுக்கு வந்து பார்வையிட வரும் திமுகவினரைக் கூட மக்கள் அனுமதிக்க தயாரில்லை. மழைக் காலங்களில் குடிநீரை பாதுகாப்பாக விநியோகம் செய்ய வேண்டியது மிக மிக முக்கியமானது. ஆனால் இந்த சம்பவத்தை மறைத்து விடுவதிலேயே இந்த அரசு முனைப்புடன் உள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட மாநில அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்கள் சாப்பிட்ட உணவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நடந்துபோன பெரும் சோகத்தை மறைப்பதற்காக மனசாட்சி இல்லாமல் அமைச்சர் ஒருவரே பொய் பேசுகிறார். உணவில் பிரச்சனை என்றால் ஒரு வீட்டில் தானே பாதிப்பு ஏற்படும். ஒரு பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் எவ்வாறு வயிற்றுப் போக்கு என்றால் எப்படி? நடந்துபோன தவற்றை மறைப்பதில் காட்டும் தீவிரத்தை பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் காட்டியிருக்க வேண்டாமா?

தமிழக அரசு மெத்தனப் போக்குடன் சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி மக்களின் உயிருடன் விளையாடக்கூடாது. இதற்கு எனது கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறேன். குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தகுந்த சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யவும் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மக்களை காப்பதிலும் அவர்களுக்கு தேவையான, அடிப்படையான விஷயங்களை செய்வதிலும் இந்த அரசுக்கு ஆர்வம் இல்லை. மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கூட திராணியற்ற இந்த அரசை இனிமேலும் மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டோகளுக்கு போஸ் கொடுத்து, வெற்றுப்பேச்சு பேசி இந்த அரசை நடத்துவதை நிறுத்த வேண்டும். நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன் வரவேண்டும்.

மழைக்காலம் இன்னமும் தொடர்வதால் தமிழக அரசு தீவிர கண்காணிப்புடன் இருந்து மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இல்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத அரசை தூக்கி எறிய மக்கள் தயங்க மாட்டார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganDMK governmentDravidian modelPallavaram drinking water issue
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் – இலங்கை ஐ.நா. அலுவலகம் முன் உலக இந்து அமைப்பு பேரவை ஆர்ப்பாட்டம்!

Next Post

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மை கள நிலவரம் தெரிவிக்கப்படுகிறதா? அண்ணாமலை கேள்வி!

Related News

சீனா : சண்டை போடும் மனித ரோபோ!

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை திட்டம் : மத்திய அரசு ஒப்புதல்!

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல் – நயினார் நாகேந்திரன் நன்றி!

AWS சர்வர் பாதிப்பால் சூடான ஸ்மார்ட் மெத்தைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் தங்கப்பட்டு சரிகையை யாக குண்டத்தில் இட்டு வழிபாடு!

திராவிட மாடல் ஆட்சிக்கு தீபாவளி மதுபான விற்பனை சாதனை – ஹெச்.ராஜா விமர்சனம்!

யமுனை நதியில் மிதக்கும் நுரைகளை அகற்றும் பணி தீவிரம்!

பட்டுக்கோட்டை அருகே 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

ஆந்திரா : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் தற்கொலை!

நவீன கடல் டிரோன்களை வெளியிட்டுள்ள உக்ரைன்!

நுரை பொங்கி காட்சியளித்த சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை!

சிவகங்கை : டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies