தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மை கள நிலவரம் தெரிவிக்கப்படுகிறதா? அண்ணாமலை கேள்வி!
Sep 7, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மை கள நிலவரம் தெரிவிக்கப்படுகிறதா? அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 5, 2024, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மை கள நிலவரம் தெரிவிக்கப்படுகிறதா என  சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், 2 உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன். இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?

அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 – 13 தான் என்கிறார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: tmailnadu bjp presidentannamalaiDMKstalinPallavaram drinking water issue
Share
Tweet
SendShare
Previous Post

மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியாத அவலம், இதுதான் திராவிட மாடலா? – எல்.முருகன் கேள்வி!

Next Post

படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பு பணி தீவிரம் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies