டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் வினவினார்.
நெறிமுறை இல்லாத திமுக அரசுக்கு வரும் 2026 தேர்தலில் மக்கள் தக்க தீர்ப்பளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் வேலை கொடுக்கும் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் நண்பர்கள் தான் என்றும், வெள்ள பாதிப்புகளில் தமிழகஅரசு காவி சாயம் பூசாமல் நடவடிக்கை எடுக்குமாறு விஜய் கூறியது சரியே என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தனம் வாரி பூசம் அளவிற்கு அமைச்சர் பொன்முடி நடந்து கொள்ளவில்லை என்றும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.