ஓசூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற, அவர், உழவர் மாநாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.மணி, வரும் 21 -ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.