உத்தரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், செடிகளுக்கு நீர்பாசனம் செய்வதற்காக தண்ணீர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற லக்னோ-டெல்லி பேருந்து எதிர்பாராத விதமாக தண்ணிர் லாரி மீது மோதியது. .
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 8 பயணிகள் உயிரிழந்தனர், மேலும் 19-பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.