திமுக ஆட்சியில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயால்தான் மக்கள் பசியாறுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சியில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என பல பெயர்களில் வரியை உயர்த்தி மக்களிடம் இருந்து திமுக அரசு வசூலித்து விடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் மத்திய அரசு மானியமாக வழங்கி வருபவை என தெரிவித்துள்ள ஹெச்.ராஜா,திமுக ஆட்சியில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயால்தான் மக்கள் பசியாறுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
அகங்காரத்தோடு திமிராக பேசும் அமைச்சர்களின் ஆணவ நடவடிக்கை, திமுக திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பதற்கு உதாரணம் என கூறியுள்ளார்.