மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக - பாஜக குற்றச்சாட்டு!
Sep 14, 2025, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக – பாஜக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 10, 2024, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு, தற்போது அதே திட்டத்தை கருணாநிதி பெயரில் கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தால் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், மத்திய அரசின் திட்டத்தை கருணாநிதி கைவினை திட்டம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை விமர்சித்துள்ள பாஜக, மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சமூக நீதிக்கு தாங்கள்தான் பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக சுயநலத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

தமிழக அரசின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் கரு.நாகராஜன், விஸ்வகர்மா திட்டத்தை புரிந்துகொள்ளாதது போல் திமுக அரசு நடிக்கிறது என குற்றம் சாட்டினார்.

அதேபோல், விஸ்வகர்மா திட்டமும், கருணாநிதி கைவினை திட்டமும் ஒன்றுதான் என குறிப்பிட்ட அவர், வழக்கமாக அனைத்து திட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது போல் விஸ்வகர்மா திட்டத்துக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதாக விமர்சித்தார்.

அதேபோல் திமுக அரசின் செயலுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கருணாநிதி கைவினை திட்டத்தில் சேரமுடியும் என திமுக அரசு அறிவித்துள்ள நிலையில், இளைஞர்களுக்கான வாய்ப்பை தமிழக அரசு மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்கள் பயன்பெறக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் திமுக அரசு செயல்படுகிறது என குற்றம்சாட்டிய அவர், எல்லாவற்றுக்கும் அண்ணா மற்றும் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்பதே இவர்களது திட்டம் என விமர்சித்தார்.

Tags: Prime Minister's Vishwakarma schemeKarunanidhi Craft Schemecentral governmentTamilisai SoundararajanDMK governmentNarayanan Tirupati
ShareTweetSendShare
Previous Post

‘பிரகதி’ வலைதளம் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன – அண்ணாமலை

Next Post

எப்போது வருகிறது DMK files – 3 : சஸ்பென்ஸ் உடைத்த அண்ணாமலை!

Related News

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies