நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வேளாங்கன்னி, நாகூர், திட்டச்சேரி, கீழ்வேளூர், திருக்குவளை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் நாகூர் முதல் கோடியக்கரை வரை உள்ள 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களின் படகுகளை கரையிலேயே நிறுத்து வைத்துள்ளனர்.