தமிழகத்தில் திண்டுக்கல், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சேலம் மாநகரில் ஜங்ஷன், சூரமங்கலம் அஸ்தம்பட்டி அம்மாபேட்டை கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால், லீ பஜார் உள்ளிட்ட இடங்களில் பொருட்களை வாங்க வியாபாரிகள் வருகை குறைந்ததால் வெறிச்சோடி காணப்பட்டன.