கனமழை காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வீராணம் ஏரியில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூரில் பெய்துவரும் கனமழையின் காரணமாக வீராணம் ஏரி நிரம்பி வருகிறது. மேலும், நீர்பிடிப்பு பகுதிகளான மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதால் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, மதகுகள் வழியாக ஆயிரத்து 300 கன அடி உபரிநீரும், வி.என்.எஸ்.எஸ் மதகு வழியாக ஆயிரத்து 200 கன அடி உபரிநீரும் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.