எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதனால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை அவையில் சமர்ப்பித்தனர். மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், இந்தியாவின் பிரிவினையை விரும்பும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கும் நெருக்கத்தை பாஜக எம்.பி.க்கள் பட்டியலிட்டனர்.
இவ்வாறு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அவையின் மைய பகுதியில் திரண்டு அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் நிலைமையில் மாற்றமில்லாததால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.