வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக 88 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாடு முதன்முறையாக தெரிவித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. ஷேக் ஹசீனா தப்பியோடியதை தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக, 88 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.