ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதாக எழுந்த புகாரின்பேரில், நாடு முழுவதும் 19 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் அந்த அமைப்புக்கு இந்தியாவை சேர்ந்த சிலர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து அனுப்பிவைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பேரில் ஜம்மு- காஷ்மீரில் பாரமுல்லா, ரியாசி, பட்காம் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத்திலும் சோதனை நடைபெற்றது.