திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக ராமநதி, கடனாநதி மற்றும் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, குறுக்குத்துறை கோயில் வெள்ளநீரில் மூழ்கியது.
இதையடுத்து, தாமிரபரணி அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டள்ளது. குறிப்பாக சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சுமார் 41,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.