ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் படிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எழுதிய பகுதியை சுட்டிக்காட்டியுள்ளார். ஒழுங்கற்ற தேர்தல் சுழற்சி கொள்கைகள் முடங்குவதற்கும், அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் இடையூறாக உள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.