புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமாக புழல் ஏரியின் நீப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. ஏரியில் 19 புள்ளி 72 அடி நீர்இருப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது