நெல்லை மாவட்டம் அம்பை அருகே குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கினர்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நெல்லை மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக அகஸ்தியர் பட்டி விநாயகர் காலனியில் மழை நீர் செல்ல வழி இல்லாததால் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.