மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு ,குதிரைவெட்டி போன்ற தேயிலை தோட்ட பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், மணிமுத்தாறு அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.