உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை கௌரவிக்கும் வகையில் கூகுள் இன்று தனது டூடுல் டிசைனை செஸ் வடிவில் மாற்றியுள்ளது.
நடப்பாண்டுக்கான உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சீன செஸ் கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதனால் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற சாதனையாளர் என்ற பெருமையை 18 வயதேயான குகேஷ் பெற்றுள்ளார். இதனை பாராட்டும் வகையில், கூகுள் தனது டூடுல் டிசைனை செஸ் வடிவில் மாற்றியுள்ளது.