மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
Sep 6, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Web Desk by Web Desk
Dec 14, 2024, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக மூன்றடி உயரம் 2 அடி அகலம் கொண்ட தாமிரக் கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டு, 300 கிலோ நெய்யில் 150 மீட்டர் காடா துணி ஊறவைத்து தாமிர கொப்பரையில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது.

இன்று மாலை ஆறு மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றியவுடன் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் காத்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 7-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது.

தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பனை ஓலைகளை கொண்டு செய்யப்பட்டிருந்த சொக்கப்பனையும் தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு, கார்த்திகை உற்சவ விழா கடந்த 10 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள திருவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தனர்.

இந்நிலையில், திருக்கார்த்திகையை முன்னிட்டு, இன்று கோயில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்பட்டது. கோயில் பணியாளர்கள், பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என அனைவரும் பொற்றாமரைக்குளம், அம்மன் , சுவாமி சன்னதி என கோயில் முழுவதும் அகல் விளக்குகள் மூலம் லட்ச தீபங்கள் ஏற்றினர். தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் கீழமாசி வீதி , தேரடி அருகே எழுந்தருளினர். பின்னர், அங்கு சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags: Thiruparankundram Subramania Swamy TempleMaduraiPalani Murugan templeKarthigai Deepam festivalMaha Deepam
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் CEO கொலை : கோடீஸ்வர இளைஞர் கைது – சிறப்பு தொகுப்பு!

Next Post

திருவண்ணாமலை தீப திருவிழா – போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள்!

Related News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies