தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு காட்டு யானை உயிரிழந்தது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் குட்டி யானை ஒன்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் யானையை பரிசோதித்த நிலையில், அது உயிரிழந்திருப்பது தெரியவந்தது.