ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவிற்கு மத்தியில் சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
டால் ஏரி பகுதியில் வலம் வந்த வெளிநாட்டு பறவைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு காரணமாக மைனஸ் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
ரஜெளரி மாவட்டம் முகல் சாலையில் கொட்டிக்கிடந்த பனிக்கட்டிகள் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலைகள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் அடர் பனி மூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்தனர். கான்பூரில் வானம் தெளிவாக காணப்பட்டாலும், அடர் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிரிலிருந்து தங்களை தற்காத்துக் கொண்டனர்.