தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவும் நிலையில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள், இரவுநேர முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
டெல்லியில் மைனஸ் 5 டிகிரிக்கும் கீழே வெப்பநிலை சென்று, கடும் குளிர் நிலவுகிறது. சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள் கடும் குளிருடன் உறங்க முடியாததால் இரவுநேர முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
அங்கு அவர்களுக்கு தேநீர், உணவு உள்ளிட்டவை வழங்கப்படுவதுடன், மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.