டெல்லி பல்கலைக் கழகத்தில் நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தேர்வு அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் இரவிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களை போலீசார் கலைந்து போகச் சொன்னதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும், அதைத்தொடர்ந்து தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் பலர் காயமடைந்ததாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். முழுமையடையாத பாடத்திட்டம், இடைநிலை ஆசிரியர்கள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராடி வருவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.