யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னையில் மீண்டும் கைதாகி உள்ளார்.
தேனி கஞ்சா வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் சவுக்கு ஷங்கரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சவுக்கு சங்கருக்கு எதிராக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.