உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை திரித்து கூறும் காங்கிரஸ் - எல்.முருகன் கண்டனம்!
Aug 20, 2025, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை திரித்து கூறும் காங்கிரஸ் – எல்.முருகன் கண்டனம்!

Web Desk by Web Desk
Dec 19, 2024, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணல் அம்பேத்கர்  குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை காங்கிரஸ்  திரித்து  கூறுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ” தாம் பேசியது என்ன என்பது குறித்து  அமித்ஷா தெளிவான விளக்கத்தை தந்துள்ளார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த பாபசாகேப் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தியதும் அவர் உருவாக்கிய அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதும் காங்கிரஸ் கட்சி தான்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பதை அமித்ஷா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு அவரது மரணத்துக்குப் பின்னர் கூட பாரத ரத்னா தர மறுத்து வேடிக்கை காட்டிய கட்சிதான் காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்களுக்கு தானே பல முறை பாரத ரத்னா விருதைக் கொடுத்துக் கொண்டார்கள். 1955-ம் ஆண்டு நேரு தமக்கு தாமே பாரத ரத்னா விருது பெற்றுக் கொன்டார். 1971-ம் ஆண்டு இந்திரா காந்தி தமக்கு தாமே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டார்.

ஆனால் 1990-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத காலத்தில், பாஜக ஆதரவுடனான மத்திய அரசு ஆட்சியில் இருந்த போதுதான் அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அம்பேத்கர் மீதான நேருவின் வெறுப்பை நாடு நன்கு அறியும்.

அதே சமயம் பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணல் அம்பேத்கரை பெருமை சேர்த்து வருவதை நாடறியும். அண்ணல் அம்பேத்கர் புகழை உலகம் முழுவதும் பாஜக பரப்பி வருகிறது.

அம்பேத்கர் அவர்கள் இயற்றிய சட்டங்களை உரிய முறையில் அமல்படுத்தி அனைவருக்கும் உரிய நீதி என்ற உன்னத கோட்பாட்டை செயல்படுத்தி வருவதும் பாரத பிரதமர்  மோடி தலைமையிலான அரசு தான். தேர்தல் சமயத்தில் அமித்ஷா அவர்களின் பேச்சை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்து திரித்து காங்கிரஸ் வெளியிட்டது.

அதேபோல தற்போதும் காங்கிரஸ் திரித்து கூறும் வேலையை மீண்டும் செய்கிறது காங்கிரஸ் கட்சி நேற்று முதல் உண்மையை மறைத்து திரித்து தொடர்ந்து பொய் மூட்டைகளை அவிழ்ந்து விடுகிறது. காங்கிரஸ் கட்சிதான் அண்ணல் அம்பேத்கர் வகுத்த இடஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி.

மக்கள் தலைவர்களுக்கு எதிராக செயல்பட்டதால் தான் காங்கிரஸ் இன்று ஆட்சி அதிகாரத்தை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திரித்துகூறும் அரசியலை பாரத நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

இந்த அவதூறு பிரசாரம் தொடர்ந்தால் காங்கிரஸை மக்கள் தேர்தல் களத்தில் இருந்தே அகற்றி விடுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: Congresshome minister amit shahminister l muruganBharat Ratna.AmbedkarBabasaheb Ambedkar
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் 28 பேர் விடுதலை – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

ஜமைக்கா சூப்பர் மார்கெட்டில் கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு – தமிழக இளைஞர் பலி!

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies