பழங்குடியின பெண் எம்பியை அவமதித்ததற்காக, ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகலாந்து மாநிலத்தின் முதல் பெண் எம்பியான பாங்னோன் கோன்யக், ராகுல் காந்தி தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம், ஒரு எதிர்க்கட்சித் தலைவர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணமாக ராகுல் காந்தி நடந்து கொண்டு வருவதாகவும், இது கடும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
தனது அநாகரிக செயலுக்காக ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள வானதி சீனிவாசன்,
நாகலாந்து பழங்குடியின பெண் எம்பி அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பெண்கள் மீது மரியாதையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் கொண்டுள்ள அனைவரும் ராகுல் காந்தியின் செயலை கண்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.