காங்கிரஸ் படுதோல்விக்கு சோனியா குடும்பமே காரணம் : மணி சங்கர் ஐயர் குற்றச்சாட்டு - சிறப்பு கட்டுரை!
Sep 29, 2025, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் படுதோல்விக்கு சோனியா குடும்பமே காரணம் : மணி சங்கர் ஐயர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 20, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமது அரசியல் வாழ்க்கையில் நடந்த ஏற்றத்துக்கும் சரிவுக்கும், சோனியா குடும்பமே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் தெரிவித்திருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான மணி சங்கர் ஐயர், 1991,1999,மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மத்திய அமைச்சராகவும் பணி புரிந்துள்ளார்.  83 வயதான மணிசங்கர் ஐயர் சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர்.

2004 ஆம் ஆண்டு, மத்திய அமைச்சராக அந்தமான் சுற்றுப்பயணம்  மேற்கொண்டார் மணிசங்கர் ஐயர். ​​அப்போது, அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில், வீர சாவர்க்கரை போற்றும் வாசகம் அடங்கிய பலகைக்குப் பதிலாக மகாத்மா காந்தியின் மேற்கோள் அடங்கிய பலகையை வைக்க உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2011ம் ஆண்டில், காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான அஜய் மக்கனை மணி சங்கர் ஐயர் கேலி செய்தார். அது மிகப் பெரிய மாணவர் போராட்டத்துக்கு வழி வகுத்தது.

2014 ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, டீ விற்பவர் ஒருபோதும் இந்தியாவின் பிரதமராக முடியாது. வேண்டுமானால், அவரால்,காங்கிரஸ் கூட்டங்களில் டீ விற்க முடியும் என்று பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மணி சங்கர் ஐயர் பேச்சு,அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கட்சியின் கருத்தல்ல என்றும் காங்கிரஸ் விளக்கம் கொடுத்தது. மேலும், பிரதமர் மோடியை ” நீச் ஆத்மி ” என்று விமர்சனம் செய்தார். கடும் எதிர்ப்பு வந்த நிலையிலும், ” நீச் ஆத்மி ” என்ற தனது கருத்தை நியாயப் படுத்தினார் மணி சங்கர் ஐயர். இதனையடுத்து, கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து மணி சங்கர் ஐயர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், மணி சங்கர் ஐயர், ( A Maverick-in-Politics) எ மேவரிக் இன் பாலிடிக்ஸ் என்ற நூலை எழுதி இருக்கிறார். அந்த நூல் குறித்து அளித்த பேட்டியின் போது, தனது அரசியல் சரிவுக்கு சோனியா குடும்பமே காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த பத்து வருடங்களாக சோனியாவைச் சந்திப்பதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை என்றும் ராகுல் காந்தியுடனான ஒரே ஒரு சந்திப்பும் ஆக்கப்பூர்வமானதாக இல்லை என்றும் கூறியுள்ள மணி சங்கர் ஐயர், பிரியங்கா எப்போதாவது போனில் அழைப்பார் என்றும் கூறியுள்ளார்.

இதுதான் சோனியா குடும்பத்துடனான தனது தொடர்பு என்றும், தான் ஓரங்கட்டப்பட்டதற்கும் தன் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆனதற்கும் சோனியா குடும்பமே காரணம் என்று மணிசங்கர் பட்டவர்த்தனமாக கூறியுள்ளார்.

இதற்கிடையே, 2012-2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் சரியாக இல்லை என்றும், அப்போது சோனியாவின் உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்ததாகவும் , அப்போதைய பிரதமர் மண் மோகன் சிங் 6 முறை இதய அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், அதுவும் அடுத்து வந்த மக்களவை தேர்தலில் வரலாறு காணாத படு தோல்வியை காங்கிரஸ் அடைய காரணம் என்றும் மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  காங்கிரஸ் ஆட்சி மீது காமன் வெல்த் ஊழல் உள்ளிட்ட ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வந்தன. குறிப்பாக, 2ஜி மெகா ஊழல் வழக்கில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி மற்றும் ஆ ராசா சிறைக்குச் சென்றனர். அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தைச் சரியாக கையாள தெரியாத சோனியா குடும்பத்தால் தான், வெறும் 44 இடங்களில் மட்டுமே காங்கிரசால் தக்க வைக்க முடிந்தது என்று மணி சங்கர் ஐயர் கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல், 2004ம் ஆண்டு மன்மோகன் சிங்கைப் பிரதமராக தேர்வு செய்தது சோனியா செய்த மிகப் பெரிய தவறு என்று கூறியிருக்கும் மணி சங்கர் ஐயர், பிரணாப் முகர்ஜியை பிரதமராகவும், மன்மோகன் சிங் குடியரசுத் தலைவராகவும் இருந்து இருந்தால் 2014ஆம் நடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அவமானத் தோல்வியைச் சந்தித்திருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.

Tags: Congresssonia gandhiSenior Congress leader Mani Shankar Aiyarrajjiv gandhiTamil Nadurahul gandhi
ShareTweetSendShare
Previous Post

கோயில்களில் காணிக்கையாக பெற்ற 443 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Next Post

சிதறும் இண்டி கூட்டணி : மம்தாவா? ராகுலா? முற்றும் மோதல் – சிறப்பு கட்டுரை!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies