வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு தமிழக மக்கள் தக்க பதிலளிப்பார்கள் - அண்ணாமலை உறுதி!
Aug 20, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு தமிழக மக்கள் தக்க பதிலளிப்பார்கள் – அண்ணாமலை உறுதி!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 10:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு, கூடிய விரைவில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “கோயம்புத்தூரில், கோவை குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து, நடைபெற்ற கருப்பு தின பேரணியில் கலந்து கொண்டோம். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் . சிவலிங்கம். கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், , கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ் மற்றும் பெருவாரியான பொதுமக்களும், பாஜக சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

தீவிரவாதச் செயல்களால், கோயம்புத்தூரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயம்புத்தூரில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறது திமுக அரசு.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை மனித வெடிகுண்டு தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று பூசி மறைக்கப் பார்த்தது திமுக அரசு. அதற்குத் துணை நின்றது காவல்துறை. ஆனால், என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில், கோவை மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்காகத் திட்டமிடப்பட்ட இடங்கள், அதன் பின்னணியிலிருந்த தீவிரவாதிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், கோயம்புத்தூர் காவல் ஆணையர் அலுவலகமும் ஒன்று.

இனியாவது காவல்துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்காக திமுக ஆடும் நாடகத்துக்கு, காவல்துறை துணைபோகக் கூடாது. கடந்த 1998 ஆம் ஆண்டு, 58 உயிர்கள் பலியான கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின்போதும், திமுக ஆட்சிதான். திமுக அரசு நினைத்திருந்தால், அந்த குண்டுவெடிப்பையும் தடுத்திருக்க முடியும்.

அத்தனை உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், திமுக, வாக்கு அரசியலுக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தீவிரவாதச் செயல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால், 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதியின் உடலை, ஊர்வலமாகக் கொண்டு செல்ல அனுமதித்திருக்கிறது அதே திமுக அரசு.

திமுக மட்டுமல்ல, சீமான், திருமாவளவன் ஆகியோரும், வாக்கு அரசியலுக்காக, தீவிரவாதிக்கு இரங்கல் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். கோயம்புத்தூர் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். கோயம்புத்தூரின் வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிப்புக்குள்ளாவதே, இந்த வாக்கு அரசியல் செய்யும் கட்சிகளால்தான். கோயம்புத்தூர் மக்கள் இந்தக் கட்சிகளைப் புறக்கணிப்பதே, வளர்ச்சிக்கான தீர்வாக அமையும்.

மேலும் பேரணியில் பங்கேற்ற , இந்து முன்னணி மாநிலத் தலைவர்  காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சிவலிங்கம், பாஜக
சகோதர சகோதரிகள், பொதுமக்கள் உள்ளிட்டஅனைவரையும் கைது செய்திருக்கிறது கையாலாகாத திமுக அரசின் காவல்துறை.

கோயம்புத்தூரில் குண்டு வைத்து பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதியின் இறுதி ஊர்வலத்துக்குப் பாதுகாப்பும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிய எங்களைக் கைதும் செய்து, வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு, கூடிய விரைவில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Hindu Munnani State President Kadeshwara C. Subramaniamcoimbatore bjp rallyanathi SrinivasanDMKVishwa Hindu ParishadTamil Nadu BJP State President Annamalai
ShareTweetSendShare
Previous Post

சென்னை ராஜ் பவனில் கிறிஸ்துமஸ் விழா – தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies