சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானது அபத்தமானது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்த மறுதினமே அமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜாமீனில் வெளியே வந்த மறுநாளே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானது அபத்தமானது என அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.