உலக தியான தினத்தை ஒட்டி வாழும் கலை நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஐநாவில் இன்று தியானம் மேற்கொள்கிறார்.
இன்றைய தினம் உலக தியான தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாழும் கலை நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஐக்கிய நாடுகள் சபையில் இன்று இரவு எட்டு மணிக்கு தியானம் மேற்கொள்கிறார். மேலும் அவர் சிறப்புரை ஆற்றுகிறார்.
இதுதொடர்பாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தியானத்தின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறினார்.