நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது.
அம்பேத்கர் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் 2 எம்பிக்கள் காயமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது.