புதிய தேசிய கல்விக்கொள்கை மாணவர்களை பாரதத்தின் கனவை நோக்கி அழைத்து செல்லும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள லோக்சேவா இ- பள்ளியை அவர் திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், மாணவர்களை மேம்படுத்தும் கருவியாக கல்வி முறை இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
செய்யக்கூடிய மற்றும் செய்யத்தகாத விஷயங்களை பற்றி மட்டும் போதிக்காமல், கல்வியமைப்புகள் தங்கு தடையின்றி செயல்பட சீரான ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
புதிய கல்விக்கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பாரதத்தின் கனவை நோக்கி மாணவர்களை விரைவில் அழைத்து செல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.