வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை நோக்கி திரும்பியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை நோக்கி திரும்பியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என்றும், வரும் 24ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தள்ளது.