மறைந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆலய திறப்பு விழா அழைப்பிதழை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மாநில நிர்வாகிகள் வழங்கினர்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம், தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்ததாகவும், வரும் 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேப்டன் ஆலயத் திறப்பு விழாவை அழைப்பிதழை வழங்கியதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.