டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதுதொடர்பான தகவலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பயன்மிகு ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக மக்கள், மொழி, இலக்கியம் ஆகியவை மீது அளவற்ற அன்பு செலுத்தும் பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.