கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் சால்வை அணிவிக்க சென்ற அமைச்சர் மனோ தங்கராஜை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
குளச்சல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக ராகுல் காந்திக்கு சால்வை அணிவிப்பதற்காக அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுக்கூட்ட மேடையில் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
இருப்பினும் அவரை ராகுல்காந்தி கண்டுகொள்ளவில்லை. ஒருகட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தாமாக முன்வந்து சால்வை அணிவிக்க முயன்றும், ராகுல் காந்தி அதனை புறக்கணித்துவிட்டு சென்றார். இச்சம்பவம் மேடையில் நின்றிருந்தவர்களிடமும், திமுக கூட்டணி வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
















