டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ் ஜனத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தியே பிரதமரின் முடிவுகள் இருக்கும் என கூறியுள்ளார்.
ஏலத்தை நிறுத்தி மத்திய அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை செய்ததற்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார். சுரங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கும் அண்ணாமலை நன்றி கூறியுள்ளார்.