2026 தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்குமா என்பது தெரியாது என்றும், 200 இடங்களை கைப்பற்றுவோம் என்ற ஸ்டாலினின் கனவு பகல் கனவாகதான் போகும் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களது நூறாவது பிறந்தநாளையொட்டி பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு முன்பாக உள்ள கொடி கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். வாஜ்பாய் அவர்களது 65 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 56 ஆண்டுகாலம் எதிர் அணியில் இருந்து அரசியல் செய்திருக்கிறார். ஆரோக்கியமான அரசியலுக்கு வித்திட்டவர். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகுந்த ஆதரவை கொடுத்துக் கொண்டிருந்தார். முரசொலி மாறன் மறைவின்போது நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியவர். ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்த சென்றவர். பிரதமர் அவர்கள் அவர் வழியில் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு தொண்டனாக தன்னுடைய கருத்துக்களை எப்போதும் பதிவு செய்பவர். நல்லாட்சி என்றாலே வாஜ்பாய் என்றுதான் பதிவு செய்து இருக்கிறார்கள். அவரது நூறாவது பிறந்தநாளை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் பாஜக கொடியேற்ற வேண்டும் எனவும் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என எங்களது பூத்தை சார்ந்த நண்பர்களோடு இந்த நிகழ்ச்சியை கொண்டாடினோம். தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்று கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
வாஜ்பாய் ஆட்சி, மோடியின் ஆட்சியும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்களது சபதமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் திருமாவளவன் இருப்பாரா, கம்யூனிஸ்ட் கட்சியினர் இருப்பார்களா, வேல்முருகன் இருப்பார்களா என தெரியாது. ஆனால் 200, 200 என அண்ணன் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருப்பது கனவாக தான் போகும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
















